அரங்கு நிறைந்த விழாவான ‘கவிக்கோ’ ஆவணப்பட வெளியீடு!
ஞாயிறன்று மாலை டிஸ்கவரி புக் பேலஸ் பிரபஞ்சன் அரங்கில் கவிக்கோ ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு கலந்துரையாடலும் நடைபெற்றது. கவிஞர் இந்திரன், கவிஞர் – இயக்குனர் சீனு ராமசாமி, கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோருடன் படத்தின் ஒளிப்பதிவு இயக்குனர் சிஜே ராஜ்குமார், இசையமைப்பாளர் தாஜ்நூர் ஆகியோருடன் ஆவணப்படத்தின் இயக்குனர் பிருந்தாசாரதியும் கலந்துகொண்டார். ஆவணப்படம் அனைவரையும் கவர்ந்ததுடன் அதன் நாயகரான கவிக்கோவைப் பற்றியும் அவரது கவி ஆளுமை குறித்தும் பலரிடமிருந்தும் கருத்துக்கள் ஊறிய வண்ணம் இருந்தன. இயக்குனர் […]
மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ‘லூசிஃபர்-2’!
2019-ல் வெளியான லூசிஃபர் என்ற மலையாளப் படம், இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் தொடர்ச்சியாக, இரண்டாம் பாகமாக, “L2E எம்புரான்” ஒரு பிரம்மாண்ட சினிமா அனுபவமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, கொச்சியில் விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மெகாஸ்டார் மம்முட்டி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். படத்தின் முக்கிய நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். படத்தின் டீஸர், வடக்கு ஈராக்கில் கைவிடப்பட்ட […]
கணவன்-மனைவி என்பதைத் தாண்டி அறிவுத் தோழர்கள்!
தமிழில் ‘இரட்டைக்கிளவி’ எப்படியோ, அப்படித்தான் மூத்த கிராமியக் கலைஞர்கள் விஜயலட்சுமி – நவநீதகிருஷ்ணன் தம்பதியர். இரண்டு பெயரில் ஒரு பெயரை நீக்கினாலும் இன்னொரு பெயருக்கு தனித்த அடையாளம் தெரியாத அளவுக்கு ‘செம்புலப் பெயல் நீர்போல’ கலந்த இல்வாழ்க்கை இவர்களுடையது. மதுரையில் பரவை என்ற கிராமத்தில் இயற்கை சூழ வாழ்ந்து வருபவர்களிடம், `கிராமியக் கலைகளைத் தாண்டி, உங்கள் ரிலேஷன்ஷிப் பற்றி இன்றைய தலைமுறைக்குக் கொஞ்சம் சொல்லுங்களேன்’ என்றோம். ”என்னோட அம்மா வழி ஆச்சியும் விஜியோட அப்பாவைப் பெத்த ஆச்சியும் […]
நாட்டிய சாஸ்திரத்தைக் கற்பதோடு தொடர் பயிற்சியும் தேவை!
ஜனவரி 27-ம் தேதி காலை. சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள டாக்டர். எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் அமைந்திருக்கிற எம்.ஜி.ஆர். அரங்கம் பார்வையாளர்களால் நிறைந்திருந்தது. கல்லூரியிலுள்ள நாட்டியப் பள்ளியின் 20-வது ஆண்டு துவக்க விழா கோலாகலமாக நடைபெற்றது. தேர்ச்சிப் பெற்ற அனுபவத்தோடு பரத நாட்டியத்தை இனிய அனுபவமாக மேடையில் நிகழ்த்திக் காட்டினார்கள் நாட்டியக் கல்வி பயிலும் மாணவிகள். தொடர்ந்து அதே மேடையில், மோகினி ஆட்டத்தைச் சிறப்பாக ஆடிக் காட்டினார்கள். குச்சிப்பிடி நடனத்தையும் அழகான அபிநயங்களுடன் நிகழ்த்திக் […]
செயலை முடிப்பதில் கவனம் செலுத்துங்கள்!
இன்றைய நச்: ஒரு செயலை செய்ய முடியாமல் போனதற்கு காரணங்களைத் தேடாதீர்கள்; அதை எப்படியாவது செய்து முடிப்பதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள்! – ரால்ப் மார்ஸ்டன்
ஊக்கத்துடன் கூடிய உழைப்பு உயர்வு தரும்!
இன்றைய நச்: மன உறுதி மட்டும் இருந்தால்போதாது, அந்த உறுதியைப் போலவே செயல் ஊக்கத்துடன் கூடிய உழைப்பும் சேர்ந்தால்தான் வெற்றிக்கு வழி வகுக்கும்! – பெர்சி பைஷே ஷெல்லி