க்ரைம்

அண்ணா பல்கலை. மாணவிக்கு நிகழ்ந்த கொடுமைக்கு யார் பொறுப்பு?

2024-ம் ஆண்டின் கடைசி நாட்கள் தமிழகத்தைக் களங்கப்படுத்தும் கறுப்புச் செய்திகளுடன் முடிகிறதே என கவலைப்பட வைத்த சம்பவம், நெல்லையில் அரங்கேறியது. அங்குள்ள பாளையங்கோட்டை பகுதியில் நெல்லையின் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது, கடந்த 20-ம் தேதி ஒரு விசாரணைக்கு வந்த வாலிபர், நீதிமன்ற வாயில் முன்பு துடிக்கத் துடிக்க வெட்டிக் கொல்லப்பட்டார். போலீசார் கண் முன்னால் இந்த கொடூரம் நிகழ்ந்தது. இதனை மறக்கடித்து, நாடு முழுவதையும் பதைபதைக்க வைக்கும் சம்பவம் தலைநகர் சென்னையில் கடந்த 23-ம் தேதி நிகழ்ந்தேறியுள்ளது. […]

என் சாவுக்குப் பிறகு கூட நீதி கிடைக்கவில்லை எனில்…!

“என் சாவுக்குப் பிறகு கூட எனக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், என் உடலை எரித்து என் உடலின் சாம்பலை ஜான்பூர் நீதிமன்றத்தின் சாக்கடையில் கலந்து விடுங்கள், அந்த அவமானம் காலத்திற்கும் சாட்சியாக இருக்கட்டும்” அதுல் சுபாஷின் வேதனையின் இறுதி வரிகள், கோடிக்கணக்கான இந்திய ஆண் மக்களின் மனசாட்சியை உலுக்கி எடுக்கும் வரிகள். அதுல் சுபாஷ் பெங்களூரில் ஒரு AI Engineer, வெல் எஜுகேடட். இவர் சாவுக்குக் காரணமாக ஐந்து பேர்களை மிக ஸ்ட்ராங்கா குறிப்பிட்டுள்ளார் சுபாஷ். ஒரு […]

அரசு மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து: யார் மீது தவறு?

மருத்துவமனைகளில், அறுவை சிகிச்சைக்கு டாக்டர்கள் கத்தியை எடுப்பதுதான் வழக்கம். ஆனால், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில், டாக்டர் ஒருவர் 7 இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட ‘ஆபரேஷன்’, தமிழகம் முழுவதும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அருகேயுள்ள புதுப்பெருங்களத்தூரைச் சேர்ந்த 26 வயது இளைஞர் விக்னேஷ், இந்த பயங்கர நிகழ்வை அரங்கேற்றி உள்ளார். அவரது தந்தை 6 மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். தாயார் பிரேமாவுக்கு புற்றுநோய். 6 மாதங்களாக கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு […]

இளைஞர்களிடம் பரவலாகும் போதை மாத்திரைகள்!

செய்தி:  சென்னை முகப்பேரில் போதை மாத்திரைகள் விற்ற 5 கல்லூரி மாணவர்கள் கைது. – செல்போன் செயலி மூலம் சப்ளை செய்தது அம்பலம்! கோவிந்த் கமெண்ட்: ஒரு பக்கம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் போதைப் பொருட்களை உபயோகிப்பது குறித்து உருக்கமான வேண்டுகோளை ஊடகங்கள் வழியாக விடுக்கிறார். மற்றொருபுறம் போதை வஸ்துகள் பரவலாக விநியோகம் ஆவதும் நடந்து கொண்டிருக்கிறது. சிலர் குடிசைத் தொழில் மாதிரியே இவற்றை தயாரிப்பதும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாகத் தான் போதை மாத்திரைகள் விற்ற […]

இப்படியும் சில மனிதர்கள்!

செய்தி:                    சென்னை அமைந்தக்கரை அருகே வீட்டில் பணிபுரிந்த 16 வயதேயான சிறுமியை கொடூரமாகத் தாக்கி கொலை செய்துவிட்டு, நாடகமாடிய குடும்பத்தினரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை. கோவிந்த் கேள்வி:     சிறுமிகள் மீதான பலாத்கார நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருப்பது நம் சமூகத்தில் இருக்கின்ற சிலரின் குரூரங்களையே வெளிக்காட்டுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் சற்றே மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியைக் […]

குஜராத்தில் போலியாக நடத்தப்பட்டிருக்கின்ற நீதிமன்றம்!

செய்தி: குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்தியவர் கைது! ஓராண்டில் 500 வழக்குகளுக்குமேல் தீர்ப்பு சொல்லி, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தகவல். கோவிந்த் கமெண்ட்: எப்படியெல்லாம் கிரிமினல் தனமானவர்கள் முன்னேறிவிட்டார்கள். போலியான போலீஸ் அதிகாரிகளைப் பார்த்திருக்கிறோம். மிகச்சரியாக வந்து, மிகவும் பொறுப்பாக சோதனையிட்டு பறிமுதல் செய்யும் போலியான வருமான வரித்துறை அதிகாரிகளை பார்த்திருக்கிறோம். போலியான வழக்கறிஞர்கள், போலியான ஊடகவியலாளர்கள் என்று போலியான வகையறாக்கள் நீண்டு கொண்டே இருக்கும் காலகட்டத்தில், தற்போது குஜராத்தில் இன்னும் ஒரு படி […]