அரிய புகைப்படங்கள்

‘அன்னமிட்ட கை’ படப்பிடிப்பில் மக்கள் திலகம்!

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்., நம்பியார், ஜெயலலிதா ஆகியோர் நடிப்பில் 1972 செப்டம்பர் 15-ல் வெளியான படம்  ‘அன்னமிட்ட கை’.

பெரியாரும் அடிகளாரும்!

அவ்வை சண்முகம் நடத்திய ‘ராஜராஜ சோழன்’ நாடகத்திற்குத் தலைமை ஏற்ற பெரியாரும், குன்றக்குடி அடிகளாரும். மனமிருந்தால் மார்க்கம்!

மணமக்களை வாழ்த்தும் அன்பு உள்ளங்கள்!

அருமை நிழல்: பாண்டியராஜன்-வாசுகி திருமணத்தின்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம்! மணமக்களின் அருகில் நிற்பவர்கள்: கே.ஏ.தங்கவேலு-சரோஜா தம்பதிகள், ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.விஸ்வநாதன்! பிரபல படத்தயாரிப்பாளர் அவினாசிமணியின் மகள் தான் மணப்பெண் வாசுகி! – நன்றி: முகநூல் பதிவு

ஒப்பனைக்கு அப்பாற்பட்ட சிரிப்பு!

‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் நடித்த சமயம் நடிகர் கார்த்திக் தனது தந்தையுடன் மகிழ்ச்சியோடு கலந்துரையாடிய தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். 

தட்டுக்கெட்ட மனிதருக்கு கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்!

1956-ம் ஆண்டு எம்.கே. ராதா நடிப்பில் வெளிவந்த ‘பாசவலை’ படத்திலிருந்து இடம்பெற்ற “குட்டி ஆடு மாட்டிக்கிட்டா குள்ளநரிக்குச் சொந்தம்” என்ற பாடல் வரிகளை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

மக்கள் திலகத்தின் கையில் சூர்யா!

திரைக்கலைஞர் சிவகுமாரின் நூறாவது படம் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’. அதற்கான பட வெளியீட்டு விழாவில் எம்.ஜி.ஆரின் கையில் ‘அகரம்’ சூர்யா. அருகில் சிவகுமாரின் தாயார்.