செய்தி:
தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவேன்: செல்வப் பெருந்தகை விளக்கம்.
கோவிந்த் கமெண்ட்:
காங்கிரஸில் எப்போதுமே, எதிலுமே சர்ச்சைகளுக்கு குறையிருந்ததில்லை.
அதேமாதிரிதான் அண்மையில், காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் பேரம் நடந்ததாக வெளிப்படையாகக் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்ட சிலர் எதிர்ப்பைக் காட்டி இருக்கிறார்கள்.
செல்வப்பெருந்தகையோ தேர்தலுக்கு முன்பே பதவி விலகக் கோரிய நிலையில், தற்போது அவரே தனது பதவி விலகல் குறித்து அறிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் என்ற பேரியக்கத்தின் செயல்பாட்டைத் திரும்பிப் பார்க்கிறவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல.