செய்தி:
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களுக்கான வசதிகள் குறித்து கண்காணிக்கப்படும்!
– தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
கோவிந்த் கமெண்ட்:
வாக்குச் சாவடிகளை கண்காணிப்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இப்போதே போக்குவரத்துச் சாலைகளில் ஆங்காங்கே நின்றுகொண்டு அவரவர் தேவைக்குக் கொண்டுபோகிற பணத்தையும் பொருட்களையும் பறிமுதல் செய்கிறார்கள்.
அதுவும் பல்வேறு திருமணங்கள் நடக்கக்கூடிய காலகட்டத்தில், இத்தகைய சோதனைகள் நடந்து பறிமுதல் செய்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதையெல்லாம் செய்கிற தேர்தல் ஆணையம், வாக்காளர்களுக்குக் கடைசி நேரத்தில் பட்டுவாடா விநியோகிக்கப்படுவதை மட்டும் கண்டும் காணாததைப் போல ஒவ்வொரு தேர்தலிலும் நடந்து கொள்கிறார்களே?
கண்காணிப்பதில் ஏன் இத்தகைய ஓரவஞ்சனை?